2020-ம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்தத் திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.
இதேவேளை தற்போது சூரரைப் போற்று திரைப்படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரத்தில் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா, ‘சூரரைப் போற்று’ படத்தின் ஹிந்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரீமேக் வேலைகளை பார்வையிடுவதற்காக மும்பைக்கு சென்றுள்ளார். அந்த சந்திப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சூர்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.