ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான்.இவர் தற்போது ‘டங்க்கி’ என பெயர் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளராக தமிழ் இசையமைப்பாளர் இணைய உள்ளதாக கூறப்படுகின்றது
அந்தவகையில் நடிகரும் பாடகரும் இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷிடம் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.