பரோட்டா என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்று தான்.
பரோட்டாவில் கொத்து பரோட்டா, முடடை பரோட்டா, வீச் பரோட்டா, சில்லி பரோட்டா, கோதுமை பரோட்டா என பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வோர் சுவையை கொண்டது.
இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் ஹோட்டல் சுவையில் எவ்வாறு நூல் பரோட்டா தயார் செய்வவது என்பது பற்றி பார்ப்போம். இதற்கு தேவையானவை
மைதா மாவு- அரை கப்
உப்பு- ஒரு தேக்கரண்டி
நெய்- இரண்டு தேக்கரண்டி
தயிர்- இரண்டு தேக்கரண்டி
முடடை- ஒன்று
எண்ணெய்- தேவையான அளவு ஆகியனவாகும்.
ஒரு பாத்திரத்தில் அரை கப் மைதா மாவு எடுத்து கொள்ளவும். பின் அதில் ஒரு தேக்கரண்டி உப்பு இரண்டு தேக்கரண்டி நெய் (நெய்க்கு பதிலாக எண்ணெய் சேர்த்துகொள்ளலாம் ) ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர் அதில் இரண்டு தேக்கரண்டி தயிர் , ஒரு முடடை என்பன சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் மாவை பிசைந்து கொள்ளவும் .(சப்பாத்தி மாவை பிசைவது போல் ).
மாவை பிசைந்த பிறகு அதில் சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். பின் சப்பாத்தி கல்லில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள்.
மைதா மாவை மெல்லியதாக தேய்த்து கொள்ளவும். அதன்பின் தேய்த்து வைத்திருக்கும் மைதா மாவை கத்தி கொண்டு மெல்லிய கோடுகளாக வெட்டி கொள்ளவும். அதன் பின் அதன் மேல் லேசாக மைதா மாவை தூவி கொள்ளுங்கள். அப்போது தான் கட் செய்த துண்டுகள் ஒட்டாமல் வரும்.
பின்னர் அனைத்து துண்டுகளையும் பொறுமையாக ஒன்றாக சேர்த்து உருட்டி கொள்ளவும். அதன் மேல் எண்ணெய் தடவி கையை வைத்து வடட வடிவில் பரப்பவும். பின் இதை தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு பக்கமாக திருப்பி போட்டு வேக வைக்கவும்.
பரோட்டா வெந்தவுடன் சூடாக இருக்கும் போதே இரண்டு பக்கமும் கையால் தட்டி விடடால் சுவையான நூல் பரோட்டா தயார்.