தேவையான பொருட்கள்
உப்பு - தேவையான அளவு
இறால் - 1 கிலோ
பாஸ்மதி அரிசி - 2 கப்
நெய் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 4 நீளமாக நறுக்கியது
தக்காளி - 3 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
புதினா இலை
தேங்காய் பால் - 2 கப் நீர் சேர்த்தது
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பிரியாணி இலை
அன்னாசி பூ
தண்ணீர்
மசாலா விழுது அரைக்க
பூண்டு - 12 பற்கள்
இஞ்சி - 2 துண்டு நறுக்கியது
சின்ன வெங்காயம் - 10
துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
காய்ந்த மிளகாய் - 5
புதினா இலை
கொத்தமல்லி இலை
தண்ணீர்
செய்முறை
முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இறாலை சுத்தம் செய்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு கழுவிக் கொள்ளுங்கள்.
சுத்தம் செய்த இறாலை, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து ஊறவையுங்கள். மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து, நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
தேங்காயை அரைத்து, பிரியாணிக்கு தேவையான தேங்காய் பால் தயார் செய்யுங்கள்.பின்னர் குக்கரில், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன் நிறமானதும், அரைத்த மசாலா விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.தக்காளி நன்கு மசிந்த பின், இதில் உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்குங்கள்.
அடுத்து இதில் ஊறவைத்த இறால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள் .
குறைந்த தீயில், தேங்காய் பால் ஊற்றி கிளறுங்கள்.அடுத்து இதில் ஊறவைத்த அரிசி சேர்த்து கிளறிக்கொள்ளுங்கள்.குக்கரை மூடி, ஆவி வந்ததும், 8 நிமிடம் வரை வேகவையுங்கள்.
இப்போது சுவையான இறால் பிரியாணி தயார்.