அண்மையில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படங்கள் ’மாநாடு’ மற்றும் ’மன்மதலீலை’.இந்நிலையில் தற்போது நடிகர் நாகசைதன்யா நடிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தினை இயக்கவுள்ளார்.
இந்தத் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழியிலும் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விடயம் குடித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.