Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
சுவையான ஜில் ஜில் குல்ஃபி

Sooriyan FM - சுவையான ஜில் ஜில் குல்ஃபிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

898 Views
சூப்பரான முறையில் ரிச் லெவல் சுவையில்  குல்ஃபி நாமே வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்!
குல்ஃபி செய்ய தேவையான பொருட்கள்:
ஃபுல் கிரீம் மில்க் – அரை லீட்டர்,
சர்க்கரை – கால் டம்ளர்,
ஏலக்காய் தூள் – அரை கரண்டி,
பால் பவுடர் – 2 மேசைக்கரண்டி,
பாதாம், பிஸ்தா முந்திரி பருப்பு – தலா 5.

குல்ஃபி செய்முறை விளக்கம்:
குல்ஃபி செய்வதற்கு முதலில் ஃபுல் க்ரீம் மில்க் நமக்கு கண்டிப்பாக தேவை. எந்த பால் பாக்கெட் வாங்கினாலும் ஃபுல் க்ரீம் மில்க் என்று கேட்டு வாங்கி கொள்ளுங்கள். அப்போது தான் குல்ஃபி ரொம்ப கிரீமியாக, சூப்பராக வரும். அரை லீட்டர் பாலை ஒரு அடி பிடிக்காத பாத்திரத்தில் ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளுங்கள்.

2 டம்ளர் பால் எடுத்தால் அது ஒரு டம்ளராக சுண்டி வர வேண்டும். அந்த அளவிற்கு நீங்கள் பாலை இடைவிடாமல் கிண்டிக் கொண்டே காய்ச்ச வேண்டும். பால் காய்ச்சும் பொழுது ஓரங்களில் படியும் ஏடுகளை உடனுக்குடன் நீங்கள் எடுத்து விட்டு கொண்டே இருக்க வேண்டும். பால் ஏடு ஓரங்களில் கண்டிப்பாக படிய விடக்கூடாது எனவே படிய படிய நீங்கள் எடுத்து பாலில் சேர்த்துக் கொண்டே வாருங்கள்.

பால் நன்கு சேர்ந்ததும் ஒரு மிக்ஸியில் 2 டம்ளர் பாலுக்கு அரை டம்ளர் சர்க்கரை சேர்த்து ஏலக்காய்களை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் போது இடை இடையே அதன் தோல் பகுதி வரக்கூடாது எனவே ஏலக்காயை நைஸ் பவுடராக அரைத்து சேர்க்க வேண்டும்.

பாலில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு 2 மேசைக்கரண்டி அளவிற்கு பால் பவுடர் சேர்க்க வேண்டும்.

இப்போது பால் பாதியாக சுண்டியதும் முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு என்று உங்களிடம் எது இருக்கிறதோ அவற்றை உங்கள் தேவைக்கு ஏற்ப ரொம்பவும் பொடிதாக நொறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இதை அப்படியே தூவி 2 நிமிடம் பாலை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். நன்கு பால் ஆறி இருக்க வேண்டும். கொஞ்சம் கூட சூடு இல்லாமல் ஆறிய பின்பு சிறுசிறு டம்ளர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் முக்கால் பகுதி அளவிற்கு ஊற்றி அலுமினியம் ஃபாயில் பேப்பர் கொண்டு இறுக்கமாக காற்று புகாதபடி மூடி விட வேண்டும்.

ஒரு சிறு துளையிட்டு ஐஸ்க்ரீம் குச்சியை சொருகி கொள்ளுங்கள். இதை அப்படியே கொண்டு போய் ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். எட்டு மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் குல்ஃபி சுவையாக, சூப்பராக தயாராகியிருக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top