வேகவைத்த சோறு - 2 கப்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சைமிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பூண்டு - 4 பற்கள் நறுக்கியது
கறிவேப்பிலை நறுக்கியது
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் மீதமான சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையை சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், பெருங்காய தூள், உப்பு, கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து கலந்து விடவும்.பிறகு எண்ணெய் சேர்த்து கைகளால் மசித்து பிசையவும். உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.
உள்ளங்கையில் சிறிது எண்ணெய் தடவி, சிறிது பக்கோடா கலவையை எடுத்து ரோல்களாக உருட்டவும்.ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், உருட்டிய ரோல்களை எண்ணெயில் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும். சுவையான ரைஸ் பக்கோடா தயார்!