ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.இதனைத் தொடர்ந்து,கோ 2,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,ஹரஹர மஹாதேவகி, கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமில்லாமல்,கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.இதில், நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து,மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தனர்.இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்ததை தொடர்ந்து, அண்மையில் இவர்களது நிச்சயார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் அண்மையில் நடிகர் அஜித்தை சந்தித்திருந்தார் ஆதி.இன்று இவரும்,நிக்கி கல்ராணியும் செய்தியாளர்களை சந்தித்த போது,அஜித்திற்கு திருமண அழைப்பிதழ் வைத்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த ஆதி, “அஜித்திற்கு திருமண அழைப்பிதழ் கொடுத்திருக்கிறோம்.அவர் வருவாரா இல்லையா என்பது தெரியவில்லை”என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நிக்கி கல்ராணி பேசும் போது,18ஆம் திகதி எங்கள் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு நடிப்பது குறித்தும் இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.இவர்களின் திருமண திகதி வெளியானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.