நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு பேஸ்புக்கில் 100 மில்லியன் likes .பிரபல கால்பந்தாட்ட நடசத்திரம் போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து களத்தில் கல்ல்குவதொடு மட்டுமல்லாமல் பேஸ்புக்கிலும் கலக்குகிறார்.
இவர் பேஸ்புக்கில் 100 மில்லியன் லைக்குகளை பெற்ற சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். இவ்வாறு 100 மில்லியன் லைக் பெறும் முதல் விளையாட்டு வீரர் எனும் சிறப்பையும் ரொனால்டோ பெற்றுள்ளார்.
பேஸ்புக் வரலாற்றிலேயே 100 மில்லியன் லைக் பெற்ற இரண்டாவது நபர் என்ற பெருமையும், முதல் விளையாட்டு வீரர் என்ற சிறப்பும் ரொனால்டோவுக்கு கிடைத்திருக்கிறது.
100 மில்லியன் லைக்குகளை முதலில் பெற்ற பெருமை கொலம்பிய பாப் பாடகி ஷகிராவுக்கு உரியது.
இப்படியிருக்க அர்ஜென்டினா வீரர் லீயோனெல் மெஸ்ஸி 74 மில்லியன் லைக்குகளுடன் 9 வது இடத்தில் உள்ளார்.
ரொனோல்டோவுக்கு Twitter தளத்தில் 305 மில்லியன் Followers இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கலக்கல் நாயகன் ரொனால்டோவுக்கு வாழ்த்துக்கள்.