அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேதாளம்’ படம் வருகிற 10 ஆம் திகதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.
பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் இந்தியாவில் வெளியாகும் அன்றே வெளிநாடுகளிலும் வெளியாகுவது வழக்கம், அதைப் போன்று அஜித்தின் ‘வேதாளம்’ அவுஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, இலங்கை உட்பட பல வெளிநாடுகளில் அதே தினம் வெளியாகவுள்ளதோடு போலந்து நாட்டிலும் வெளியாகவிருக்கிறது.
இந்நாட்டில் இதுவரை எந்த தமிழ் படமும் நேரடியாக போலந்தில் வெளியானதில்லை என்று கூறப்படுகிறது. அஜித்தின் ‘வேதாளம்’ படம் போலந்தில் வெளியாவதால் அஜித்துக்கு மேலும் ஒரு கௌரவம் கிடைத்திருப்பதோடு, புதிய சாதனையும் படைத்திருக்கிறது.