கேசரி, பாயாசம் போன்றவற்றில் சேர்க்கப்படும் முந்திரி வெறுமனே சுவையானது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களையும் கொண்டது.
நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயல்பவர் எனில் உங்கள் உணவு முறையில் இது சிறந்த தேர்வாகும்.
ஊறவைத்த முந்திரிப் பருப்பில் புரதச் சத்து அதிகம் இருக்கும்.
முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரக கற்கள் உருவாகுவதைத் தடுக்கலாம்.
இதில் Potassium, Magnesium மட்டுமின்றி தாமிரம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட கனிமங்களும், Vitamin K மற்றும் E ஆகியவையும் உள்ளன. இதனால், உங்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும்.
ஆற்றலை அதிகரிக்கவும், சரும பாதுகாப்பிற்கும் இது கூடுதலாக உதவும்.
முந்திரி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது Cholesterol அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகிறது.