சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தென்னாபிரிக்க அணியின் தலைவர் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளார்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் போது டெம்பா பவுமா தசைப்பிடிப்பால் அவதிப்பட்டுவந்த நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைச் சதம் அடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றியிலும் மிக முக்கிய பங்கினை வகித்தார்.
உபாதைக்கு முகம் கொடுத்திருக்கும் அவருக்கு இன்னும் சில ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து டெம்பா பவுமா விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியின் தலைவராக சுழல்பந்து வீச்சாளர், கேசவ் மஹாராஜ் செயற்படுவார் என்று தென்னாபிரிக்க சபை அறிவித்துள்ளது.