சீனாவைப் பொறுத்தவரையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நவீன கண்டுபிடிப்புகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சவாலாக இருந்து வருகின்றது.
இத்தகைய சூழலில் சீனா தற்பொழுது நுளம்பைப் போன்ற சிறிய அளவிலான Drone ஒன்றை இராணுவ நடவடிக்கைகளுக்காக சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த Micro Drone, மத்திய சீனாவின் Hunan மாகாணத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் Robotics ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய Micro Droneகள் எதிர்வரும் காலங்களில் பாதுகாப்புத்துறை சார்ந்த பயன்பாடுகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த Micro Droneகள் Smartphone மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் நீளம் சுமார்1.3 Centimeter நீளத்தைக் கொண்டுள்ளது. இந்த சிறிய வகை Droneகள் இரகசிய இராணுவ நடவடிக்கைகளுக்கு மிக முக்கியமான பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.