அமீர்கான் நடிப்பில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் 'சிதாரே ஜமீன் பர்'. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
'சிதாரே ஜமீன் பர்' திரைப்படம் பத்து நாட்களில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.122 கோடி வசூலித்துள்ளது.
இதன்மூலம் அமீர்கானின் 6ஆவது அதிக வசூல் செய்த திரைப்படமான 'கஜினி' திரைப்படத்தின் வாழ்நாள் வசூலை (இந்திய மதிப்பில் ரூ.114 கோடி) முறியடித்துப் புதிய சாதனை படைத்திருக்கிறது.
அமீர்கானின் நடிப்பில் வெளியான மற்றொரு திரைப்படமான 'தக்ஸ் ஒப் ஹிந்தோஸ்தான்' (இந்திய மதிப்பில் ரூ. 151.3 கோடி) வசூலை முறியடிக்கும் நிலையில் உள்ளது.
ஆர்.எஸ். பிரசன்னாவின் இயக்கத்தில் உருவான 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகை ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மனநலம் பாதித்த மாணவர்களுக்குக் கூடைப்பந்து விளையாட்டைச் சொல்லித்தரும் பயிற்சியாளராக நடிகர் அமீர்கான் நடித்துள்ளார்.