Instagram பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்துக்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, Auto Reels என்ற வசதியை கொண்டு வர உள்ளது.
இனி பயனர்கள் ரீல்ஸைப் பார்க்க Scroll செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த அம்சம் சில Beta பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Reels பட்டனை Click செய்து Auto Reels ஐ On செய்தால், தானாகவே அடுத்தடுத்த Reels வர ஆரம்பிக்கும்.
தற்போது, இந்த அம்சம் iOS பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
விரைவில் Android பயனர்களுக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.