நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் August 14ஆம் திகதி வெளியாகவுள்ள திரைப்படம் 'கூலி'.
இத்திரைப்படத்தில், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜோன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் 3 பாடல்கள் அண்மையில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இத்திரைப்படத்தின் இசை மற்றும் Trailer வெளியீட்டு விழா எதிர்வரும் August 2ஆம் திகதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அஜித் பற்றிக் கூறிய விஷயம் அஜித் இரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில், '' அஜித் sir நடிப்பில் கண்டிப்பாக ஒரு திரைப்படத்தை இயக்குவேன். இது 100 சதவீதம் உறுதி. அதற்கான பேச்சு வார்த்தைகள் இப்பொழுது தான் தொடங்கியுள்ளது. எனக்கும் அவருக்கும் ஒரு TimeLine வரும் பொழுது கண்டிப்பாக அந்த திரைப்படத்தை இயக்குவேன்" என கூறியுள்ளார்.