2023ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆடு ஜீவிதம்' திரைப்படத்திற்கு ஒரு தேசிய விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
'எம்புரான்' திரைப்படத்தை பிரித்விராஜ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு இந்துமத அமைப்பினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
இதனால் தான், நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்த 'ஆடு ஜீவிதம்' திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படவில்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.