இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரரான ரிஷப் பண்ட், காயம் காரணமாக இடம்பெறவிருக்கும் 2025 ஆசியக் கிண்ண T20 தொடர் மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய அவருக்குக் குறைந்தது ஆறு வாரங்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக குறித்த தொடர்களில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.