தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் நடிக்கும் கடைசித் திரைப்படம் இதுதான் என்று கூறப்படுகிறது.
இதனால் இத்திரைப்படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கமான தளபதி விஜய் திரைப்படம் போன்று இல்லாமல், இந்த திரைப்படத்தில் அரசியல் சாயம் அதிகம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
விஜய்யின் கட்சி மற்றும் கட்சிக்கொடி பற்றிய சில காட்சிகளும் சேர்க்கப்பட்டிருக்கிறதாம்.
அதேபோல எம்.ஜி.ஆர் அவரின் புகைப்படங்களும், அவர் தொடர்பான சில காட்சிகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அவரது பாடல் வரிகளும் பயன்படுத்தப்பட இருக்கிறதாம்.
சமீப காலமாகவே அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆர். பற்றி குறிப்பிட்டு வரும் விஜய், தனது திரைப்படத்திலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இடம்பெற செய்துள்ளது எதிர்பார்ப்பைப் பற்ற வைத்திருக்கிறது.