இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய Hip-Hop ஆதி, தனது முதல் திரைப்படமான 'மீசைய முறுக்கு' மூலம் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இத்திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியானது.
கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய அந்த இத்திரைப்படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் இத்திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 'மீசைய முறுக்கு' இரண்டாம் பாகத்தை Hip-Hop ஆதி இயக்க இருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என அனைத்தையும் Hip-Hop ஆதி மேற்கொள்கிறார்.
இரண்டாம் பாகமும் சுந்தர் சி தயாரிப்பில் வெளிவரவிருக்கிறது.