தனுஷின் 53 ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள 'இட்லி கடை' திரைப்படத்தில் தனுஷ், நித்யா மெனென், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி எனப் பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திலிருந்து 'என்ன சுகம்', 'என்சாமி தந்தானே..' என இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் இத்திரைப்படத்தில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், தனுஷுடன் நடித்த அனுபவம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "நான் பார்த்ததிலேயே விவேகமான இயக்குநர் தனுஷ். படப்பிடிப்புத் தளத்தில் நிறைய பெரிய நடிகர்கள் இருந்தாலும் அவர் நடித்து காட்டி எனக்கு இப்படிதான் வேண்டும் என கேட்கிறார்.இட்லி கடை’யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன்" என்று தெரிவித்துள்ளார்.