17-வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ‘சூப்பர்4’ சுற்றில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
நடப்பு தொடரில் லீக் சுற்றில் இவ்விரு அணிகள் மோதிய முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 11 ஆட்டங்களில் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
எனவே இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியே வெற்றி பெறும் என்பது பலரது கணிப்பாக உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இன்று இரவு 8.00மணிக்கு இடம்பெறவுள்ளது.