நடிகர் அஜித் சினிமா மற்றும் கார் ரேஸ் என இரண்டிலும் அசத்தி வருகிறார். இந்த நிலையில், அண்மையில் பிரபல Youtube சேனல் ஒன்றுக்கு நடிகர் அஜித் வழங்கிய பேட்டி வைரலாகி வருகிறது.
குறிப்பாக நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தப் பேட்டியில் நடிகர் அஜித் மனம் திறந்து பேசிய விடயங்கள் பலரையும் இரசிக்கச் செய்துள்ளது. அதில் தனது மகள் மற்றும் மகன் குறித்து உணர்வு பூர்வமாக பேசியிருந்தார்.
அதில் , "என் மகள், மகனுடன் பள்ளிக்கு அல்லது வேறு இடங்களுக்குச் செல்லும்போது, அவர்கள் நான் ஏன் மற்ற அப்பாக்களைப் போல் இல்லை என அழுது கேட்கிறார்கள். அதை சொல்லும்போது அவர் சற்று கலங்கியது அனைவரின் மனதையும் நெருடியது.