Google Maps Smartphone பயனர்களுக்கு பேருதவி ஆக உள்ளது.
Google Maps மூலம் எங்கு வேண்டுமானாலும் யாரிடமும் வழி கேட்காமல் பயணிக்கலாம்.
ஆனாலும், சில சமயங்களில் பயனர்கள் தவறான வழியில் செல்லும் சிக்கலையும் எதிர்கொள்வது உண்டு.
இந்த சூழலில்தான் பயனர்களுக்காக புதிய அப்டேட்களை Google Maps அறிமுகம் செய்துள்ளது.
கூகுளின் GEMINI AI உடன் Maps தற்போது நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம்,பயனர்கள் தங்கள் செல்போனை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும்.
வீதியில் ஏற்படும் போக்குவரத்து தடைகள், மாற்றுப் பாதைகள், கட்டுமானம் குறித்த அப்டேட்களை Google Maps வழங்க தொடங்கியுள்ளது.
Google Maps மூலம் நேரடியாக மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
Google Maps இனி, விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை வாகன ஓட்டிகள் நெருங்கும்போது முன்கூட்டியே எச்சரிக்கும்.