H.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’.
இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் 3ஆவது பாடல் இன்று மாலை வெளியாகியுள்ளது.