தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் GV.பிரகாஷ்குமார். இவர் இசையமைப்பாளர் மட்டுமின்றி ஒரு நடிகராகவும் உள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘BlackMail’. இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து GV.பிரகாஷ், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ‘Happy Raj’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக கௌரி பிரியா நடித்துள்ளார்.
காதல் மற்றும் நகைச்சுவையான கதைக்களத்துடன் உருவாகிவரும் இத்திரைப்படத்தில், நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், ‘Happy Raj’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.