ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்ம் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'.
இத்திரைப்படம் ஜனவரி 9ஆம் திகதி திரைக்கு வரும் எனத் திரைப்படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.
தணிக்கைச் சான்றிதழை விரைவில் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்தது.
இந்த நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, தனி நீதிபதி உத்தரவு தொடர்பாக கேள்விகளை அடுக்கிய தலைமை நீதிபதி, இத்திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடைவிதித்து, இந்த விசாரணையை ஜனவரி 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.