'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் சினிமா இரசிகர்களின் கவனத்தை பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து 'கைதி', 'மாஸ்டர்', 'லியோ', 'கூலி', 'விக்ரம்' என விஜய், ரஜினி, கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநராக திகழ்கிறார்.
இந்தநிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைத்துள்ளார் லோகேஸ் கனகராஜ். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.