சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 9ஆம் திகதி வெளியானது. இத்திரைப்படம் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.
இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிவகார்த்திகேயனின் 100 கோடி ரூபாவுக்கு மேல் வசூலான திரைப்படப்பட்டியலில் பராசக்தி இணைந்துள்ளது.
மதராசி, அமரன், பராசக்தி என தொடர்ந்து 3 திரைப்படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.