விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘கர’.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் Teaser வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மமிதா பைஜு, KS. ரவிக்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில்,
‘கதையை எழுதும் போதே இந்தக் கதாபாத்திரத்திற்கு தனுஷ் மிகவும் பொருத்தமானவர் என்று தோன்றியது. அதே நேரத்தில், இந்தக் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.
தனுஷ் போன்ற திறமையான நடிகரை வைத்து இதைச் சாத்தியப்படுத்தியது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.