சூரியபிரதாப் இயக்கத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் நடிக்கும் திரைப்படம் 'ரூட்'.
இத்திரைப்படத்தில் நடிகை பவ்யா திரிகா கதாநாயகியாக நடிக்கிறார். பொலிவுட் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் First Look போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில்,‘ரூட்’ திரைப்படத்தின் Second Look போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
இத்திரைப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதால், இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.