இயக்குனர் அட்லீ,இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைப்படம் ஒன்று உருவாகிவருகிறது . இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.
முன்னதாக அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த ஜவான் திரைப்படத்திலும் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பதுடன் இத்திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அட்லீ, " தீபிகா படுகோன் எனது Lucky Charm. இத்திரைப் படத்தில் அவரை இதுவரை பார்த்திராத வகையில் மிகவும் Fresh ஆகவும், புதிய தோற்றத்திலும் காண்பீர்கள், தீபிகாவின் நடிப்பு இத்திரைப்படத்திலும் அனைவரையும் ஈர்க்கும்” எனவும் தெரிவித்தார்.