தமிழ் சினிமாவின் நடன இயக்குநரும், திரைப்பட இயக்குநரும், நடிகருமாக இருப்பவர் பிரபுதேவா.
அதேபோல், தமிழ்த் திரைத்துறையில் நகைச்சுவை மன்னராக எப்பவும் திகழும் நடிகர் வடிவேலு.
இவர்கள் இருவரும் இணைந்து காதலன், மனதை திருடிவிட்டாய், இராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற திரைப்படங்களின் மூலம் 90’s kids இரசிகர்களை மகிழ்வித்திருந்தனர்.
இந்த நிலையில், மீண்டும் இவர்கள் இருவரும் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு ‘Bang Bang’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் அறிமுக promo video வெளியாகியுள்ளது.
இந்த comedy chemistry கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளதால், இரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.