Pop இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர்தான் இசைக் கலைஞர் Michael Jackson. தனது பாடலாலும் 'Moonwalk' என்ற நடன அசைவாலும் பல கோடி இரசிகர்களை சம்பாதித்த இவர்; தன் பாடல்கள் மூலம் சமூக விழிப்புணர்வு கொண்ட கருத்துகளை வெளிப்படுத்தி உலகப் புகழ் பெற்றார்.
தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட 'Michael' திரைப்படமானது இயக்குநர் Antoine Fuqua இயக்கத்தில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் Michael Jacksonஇன் சொந்த அண்ணனின் மகனான Jaafar Jackson என்பவர் Michael Jackson கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதி திரைக்குவரவுள்ள 'Michael' திரைப்படத்தின் Trailer நாளை வெளியாகவுள்ளது.