சுவீடன் நாட்டின் லான்செட் ஆய்வின்படி, AI பயன்பாடு புற்றுநோய் பாதிப்பை 12% குறைத்துள்ளது.
புகழ்பெற்ற 'தி லான்செட்' மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, உலகில் மார்பக புற்றுநோய் பரிசோதனையில் AI இன் செயற்பாட்டை மதிப்பீடு செய்த முதல் சோதனையாக கருதப்படுகிறது.
இந்த ஆய்வில் சுமார் 100,000 பெண்கள் பங்கேற்றனர்.
பெண்களின் மேமோகிராம் படங்களை 2 கதிரியக்க நிபுணர்கள் (Radiologists) நேரடியாக ஆய்வு செய்தனர்.
இதில் முதலில் AI படங்களை ஆய்வுசெய்து. 1,000 பெண்களுக்கு 1.55 என்ற விகிதத்தில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
AI உதவியுடன் 81% புற்றுநோய் பாதிப்புகள், பரிசோதனையின் போதே கண்டறியப்பட்டன. இந்த முயற்சி மருத்துவ உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.