2026 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் போட்டிகள் நடைபெறும் நிலையில் மைதானத்திற்கு வரும் இரசிகர்கள் "விசில்" எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சேப்பாகம் மைதானத்திற்குள் மதுபானம், தண்ணீர் போத்தல், ட்ரோன், கணினி என பல பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது இரசிகர்கள் மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஐசிசி, பிசிசிஐ தரப்பில் விசிலுக்கு தடை குறித்த அதிகாரபூர்வ விதிமுறை எதுவும் இல்லை. எனினும், உள்ளூர் கிரிக்கெட் வாரியம், காவல் துறை மற்றும் மைதான நிர்வாகம் தரப்பில் இப்படி தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.