சில நாட்களுக்கு முன்னர், Google இன் தாய் நிறுவனமான ஆல்பாபெட், 2025 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 400 பில்லியன் டொலர் வருவாயைப் பதிவு செய்தது.
வெளியாகியுள்ள அறிக்கையின் அடிப்படையில், Google நிறுவனம் 2026 ஆம் ஆண்டை வலுவான நிலையில் தொடங்கியதாக தெரிவித்துள்ளது.
மேலும் , இந்த நிலை மாறும் தன்மை கொண்டது. இந்த வேகம் மின்சாரம் போலுள்ளது. அதனால் ஆபத்துகளும் அதிகம் என்று Google தெரிவித்துள்ளது.
எதிர்காலத் திட்டங்களில் முழுமையாக ஈடுபடும் ஊழியர்களை மட்டுமே Google நிறுவனம் தக்கவைக்க விரும்புவதாகவும், இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த AI-ஐ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் Google தெரிவித்துள்ளது.
AI சவால்களை எதிர்கொள்ள முடியாதவர்கள், தாமாகவே வெளியேறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதில், தீர்வுகள் குழுக்கள், விற்பனை மற்றும் நிறுவன மேம்பாடு போன்ற பிரிவுகளில் செயற்படும் ஊழியர்கள் அதிகம் பாதிக்கபட வாய்ப்புள்ளது என்று Google நிறுவனம் தெரிவித்துள்ளது.