இந்திய , அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடர் கடந்த 6 ஆம் திகதி பெர்த்தில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ,முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 198 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர்,அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 323 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர்,125 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில்,இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 146 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு வெறும் 25 ஓட்டங்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதேவேளை
அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி எளிதாக வெற்றி பெற்றது.
அதேவேளை இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20 தொடரை இந்தியா கைப்பற்றியது.
அதன் பின்னர்,ஒரு நாள் தொடரையும், தற்போது டெஸ்ட் போட்டியையும் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.