இயக்குநர் லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் மாறுபட்ட கதைக்களங்களை கொண்டவை.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் "LCU" என்ற ஒரு புதிய விடயத்தை ஆரம்பித்து அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே அவர் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகின்றது.
இப்போது அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'DC' என்ற திரைப்படத்திலும் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் DC படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.