கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் வழங்கப்படும் மிகச் சிறந்த விருதான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு திரைப் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கவிஞர் வைரமுத்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் கவிதைக்கு ஞானபீடம் இதுவரை இல்லை என்ற குறை என்னால் கழிந்தது. என்னை வளர்த்த தமிழ்ச் சமூகத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதைக் காணிக்கையாக்குகிறேன். இந்த விருது என் வயதைக் குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.