இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, நாடு முழுவதும் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் பயணத்திறகான அழைப்பை
விடுத்திருந்தார்.
இதற்காக 3500 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில், 350 பேர் குழுவாகப் பிரிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டனர்.
தேர்வுகள் சுகததாச மைதானத்திலும், ஆர். பிரேமதாச மைதானத்திலும் நடைபெற்றன.
தேர்வுகளில் அடிப்படையில் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையின் அழகுராஜ் லதர்சன் தெரிவானார்.
இவர் கலந்து கொண்ட வீரர்களில் அதிக வேகமாக பந்து வீசினார்.மணிக்கு 126kmh வேகத்தில் பந்து வீசினார்.
இவரின் பந்து வீச்சு குறித்து மகாலிங்க குறிப்பிடுகையில், “இதுவரை நம்மிடம் உள்ள வேகமான பந்து வீச்சாளர் மட்டக்களப்பில் இருக்கிறார். அதனால், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனவே கொழும்புக்கு வெளியே யார் நமக்கு வல்லவர் என்று பார்க்க விரும்பினோம்.
அவர் மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார்.
காலப்போக்கில் அவர் தனது வேகத்தை அதிகரிக்கும் திறன் கொண்டவர் என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
எனவே இப்போது மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஒருவரைக் கண்டுபிடித்துள்ளோம்.
ஊருக்குச் சென்ற பிறகும், நீங்கள் இன்னும் ஃபிட்டாக இருப்பீர்கள், வேகமாக பந்து வீசுவீர்கள்.
எனவே உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். நன்றாக பயிற்சி செய்யுங்கள். நன்றாக சாப்பிட்டு பலம் பெறுங்கள், அடுத்த முறை நீங்கள் வரும்போது இன்னும் வேகமாக பந்து வீசுங்கள்.” என்று மாலிங்க தெரிவித்துள்ளார்.