நிலவில் இருந்து 13,000 டெராவாட் மின்சாரம்...!
SooriyanFM Gossip - நிலவில் இருந்து 13,000 டெராவாட் மின்சாரம்...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஜப்பானின் முன்னணி பொறியியல் நிறுவனமான ஷிமிசு புதிய திட்டத்தை
அறிமுகம் செய்துள்ளது.
'லூனா ரிங்' (Luna Ring) என்று அதற்குபெயர் வைக்கப்பட்டுள்ளது.
நிலவின் மையப்பகுதியை சுற்றி சுமார் 11,000 கி.மீ நீளத்திற்கு சூரிய ஒளி தகடுகளை வளையம் போலப் பொருத்துவதுதான் இந்தத் திட்டம்.
இந்த வளையம் சுமார் 400 கிலோமீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும்.
நிலவில் வளிமண்டலம் கிடையாது, காலநிலையும் மாறாது. இதனால் 24 மணிநேரமும் தடையின்றிச் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற முடியும்.
இந்த 'லூனா ரிங்' மூலம் சுமார் 13,000 டெராவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
நிலவில் உற்பத்தியாகும் மின்சாரம் மைக்ரோவேவ் (Microwaves) அல்லது லேசர் கற்றைகளாக மாற்றப்படும்.
அதன் பின்னர் விண்வெளியில் இருந்து பாயும் இந்த ஆற்றலை பூமியில் உள்ள பெரிய நிலையங்கள் உள்வாங்கி, மீண்டும் மின்சாரமாக மாற்றி வீடுகளுக்கு விநியோகிக்கும்.
இதற்காக அதிநவீன ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்று குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.