Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
விஜய் ஆண்டனியின் நூறுசாமி திரைப்படம் !

SOORIYAN GOSSIP - விஜய் ஆண்டனியின் நூறுசாமி திரைப்படம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

187 Views
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த திரைப்படம் ‘பிச்சைக்காரன்’.
இயக்குநர் சசி இயக்கிய இத்திரைப்படம் இரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.

இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் நடித்தாலும், அவர் இயக்குநர் சசியுடன் மீண்டும் எப்போது இணைவார் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே நிலவி வந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக இயக்குநர் சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார்.

அந்த வகையில், இருவரும் இணைந்துள்ள திரைப்படத்திற்கு ‘நூறு சாமி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு திரைப்படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

‘நூறு சாமி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் அண்மையில் வெளியிட்டார். இதில் விஜய் ஆண்டனியுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வாசிகா நடித்துள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. ‘நூறு சாமி’ திரைப்படத்தின் 'மாய கனவோ' பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும் இத்திரைப்படம் மே 1ஆம் திகதி, உழைப்பாளர் தினத்தன்று திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top