Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
10
உலக கிண்ண போட்டிகள் ஏதுமின்றி இதுவரை ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்.

most ODI runs-without world cup - உலக கிண்ண போட்டிகள் ஏதுமின்றி இதுவரை ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

418 Views
     உலக கிண்ண போட்டிகள் ஏதுமின்றி இதுவரை ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்.

2015 ம் ஆண்டுக்கான உலக கிண்ணத்தை நோக்கி எல்லா அணிகளும் தயாராகி வரும் நிலையில் உலக கிண்ணம் தொடர்பாகவும் அதனோடிணைந்து சில சுவாரஸ்ய விடயங்களையும் உங்களோடு பகிரக் காத்திருக்கின்றோம்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரையில் இதுவரை எந்தவொரு உலக கிண்ண போட்டிகளிலும் விளையாடாமல் அதிக ஒருநாள் ஓட்டங்களை பெற்றவர்கள் விபரத்தை உங்களுக்காக தருகின்றோம்.

        

1.ஹமில்டன் மசகட்சா
வயது-32
அணி-ஜிம்பாபே
அறிமுகம்-2001

ஒருநாள் போட்டிகளில் 2001 ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளிலும் 144 ஒருநாள் போட்டிகளிலும் பங்கெடுத்திருந்தாலும் இதுவரை எந்தவொரு  உலக கிண்ண போட்டிகளிலும் இவர் அணியில் இடம்பிடிக்கவில்லை.

2003,2007,2011 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகள் என்ற அடிப்படையில் பார்த்தால் 3 உலக கிண்ண போட்டி தொடர்களில் இவர் பங்கெடுத்திருக்க வேண்டும் ஆயினும் கூட எந்தவொரு உலக கிண்ண போட்டியிலும் பங்கெடுக்காது காத்திருக்கும் மசகட்சா இம்முறை ஜிம்பாபே அணியின் முக்கிய வீரராவார்.

இவர் 144 ஒரு நாள் போட்டிகளில் 3961 ஓட்டங்களை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

        

2.ரோஹித் சர்மா
அணி-இந்தியா
அறிமுகம்-2007
வயது-28

அணிக்குள் வருவதும் போவதுமாகவிருந்து இப்போது இந்திய உலக கிண்ண அணியின் நம்பிக்கைக்குரிய ஆரம்ப வீரராக களம் காணக் காத்திருக்கிறார் ரோஹித் சர்மா.

2007 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளுக்கு பின்னர் இவர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானாலும் 2011 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளுக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.குறித்த காலப்பகுதியில் தென்னாபிரிக்க அணிக்கெதிரான 5 ஒருநாள் போட்டிகளில் இவர் வெறுமனே 48 ஓட்டங்களை மட்டுமே பெற்றமைதான் இதற்கான காரணம் எனலாம்.

மத்திய வரிசையில் வந்து சொதப்பிய இவர் இப்போது ஆரம்ப வீரரராக வந்து அசத்தி ஒரு நாள் போட்டிகளில் 2 இரட்டை சதங்களை பெற்று சரித்திர  உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.

இதைவிடவும் இலங்கை அணிக்கெதிரான தொடரில் ஒரே போட்டியில் 264 ஓட்டங்கள் பெற்று மிகப்பெரும் உலக  சாதனையும்  படைத்தவர்.

இதுவரை 126 போட்டிகளில் 5 சதம் 23 அரைச்சதம் அடங்கலாக 3752 ஓட்டங்களை பெற்றிருப்பினும் 2015 உலக கிண்ண போட்டிகள்தான் இவருக்கான முதல் உலக கிண்ணமாகும்.

                        

3.அலிஸ்டயார்  குக்
அணி-இங்கிலாந்து
வயது -30
அறிமுகம்-2006

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தற்போதைய  தலைவராவார்.அணியின் அண்மைய பெறுதிகள் காரணமாக இவரை இம்முறை உலக கிண்ணத்துக்கான போட்டிகளிலிருந்தும் அணித் தலைமை பொறுப்பிலிருந்தும் நீக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுபெற்றாலும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையோ, இவரே தலைவர் என்று இப்போது அறிவித்து இவருக்கான உலக கிண்ண கதவை இம்முறையாவது திறந்து வைத்திருக்கின்றது.

இவர் ஒரு டெஸ்ட் ஆட்டக்காரர்.இதுவரை மொத்தமாக 109 டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுத்திருக்கும் இவர் இங்கிலாந்து தேசிய அணிக்காக 2006 ம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி கடந்த எட்டு ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிய இவருக்கு இதுவரை 90 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடுவதற்கு வாய்ப்பு கொடுக்கபட்டது வேதனைதான்.

5 சதம் 19 அரைச்சதம் அடங்கலாக 3151 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
கடந்த 2011 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்கிய அன்று ஸ்ராஸ்சின்  ஓய்வுக்கு பின்னரே இவருக்கு இங்கிலாந்து ஒரு நாள் அணியின் தலைமைத்துவம் கொடுக்கப்பட்டு அணியிலும் நிரந்தர இடம் வழங்கப்பட்டமை கவனிக்கத்தக்கது.

                        

4.சிக்கார் தவான்.
அணி-இந்தியா
வயது-29
அறிமுகம்-2010

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்.அணியின் வழமையான அதிரடி வீரர் விரேந்தர் ஷேவாக்கை ஓரம்கட்டி விட்டு அந்த அணியின் நிரந்தர வீரராக தன்னை மாற்றிக் கொண்ட ஒரு போராட்ட குணம் கொண்ட அதிரடி வீரர்.

2010 ம் ஆண்டு அவுஸ்ரேலிய அணிக்கெதிரான தன் அறிமுக போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தவர்.

ஆயினும் 2011 உலக கிண்ண போட்டிகளுக்கு முன்னர் இவர் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்றாலும் கூட 2013 ம் ஆண்டிலிருந்து அணியின் நிரந்தர வீரராக தன்னை மாற்றிக் கொண்டவர்.

இங்கிலாந்தில் இடம்பெற்ற Champion Trophy மினி உலக கிண்ண தொடரின் ஆட்ட நாயகன் விருதையும் வென்ற இவர் தேர்வாளர்களின் நம்பிக்கைக்குரிய ஒரு அசத்தல் ஆரம்ப வீரராக நடப்பு உலக சாம்பியன் இந்திய அணியில் ஆடக்காத்திருக்கிறார்.

வெறுமனே 49 ஒருநாள் போட்டிகளில் 6 சதம் 11 அரைச்சதம் அடங்கலாக 45.46 எனும் உயரிய சராசரியில் 2046 ஓட்டங்களை குவித்துள்ள தவான் தன் உலக கிண்ண கனவுகளோடு காத்திருக்கிறார்.

           

5.தினேஷ் சந்திமால்.
அணி-இலங்கை
வயது-25
அறிமுகம்-2010

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நம்பகமான இளம் துடுப்பாட்ட வீரர்.சங்ககாரவின் ஓய்வுக்கு பின்னர் அவர் இடத்தை நிரப்பவல்ல ஒரு நேர்த்தியான விக்கெட் காப்பு தெரிந்த நல்ல ,இளம் துடுப்பாட்டகாரர் என்று தேர்வாளர்களால் நம்பபட்டவர் சந்திமால்.

ஆயினும் மிக இளம் வயதிலேயே அணியின் உதவி தலைவராகவும் ,T20 போட்டிக்கான இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டு சரியாக தன் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த முடியாது தடுமாறிப்போனவர்.

அவ்வப்போது அணிக்குள் வருவதும் போவதுமாகவிருக்கும் சந்திமால் இதுவரை 87 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 2 சதம் 11 அரைச்சதம் அடங்கலாக 1962 ஓட்டங்களை பெற்றிருப்பினும் இம்முறையும் இறுதி 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடிப்பது சந்தேகமாகே தென்படுகின்றது.

அசத்தான அடுத்த உலக கிண்ண போட்டிகளுக்கு இன்னும் 64 நாட்கள் மட்டுமே.

எதிர்பார்ப்புகளோடும் இன்னுமின்னும் சூரியன் தரும் விசேட தொகுப்புகளுக்குமாகவும் காத்திருப்போம்.


*தில்லையம்பலம் தரணீதரன்  
   2014.12.10
 







Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top