இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, சலீம் திரைப்படத்துக்குப் பின்னர் இந்தியா பாக்கிஸ்தான் திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வந்தார். படத்தின் படப்பிடிப்புக்கள் எல்லாம் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது மனைவியின் கண்காணிப்பில் படத்தின் ஏனைய வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் ஆண்டனி அடுத்து பிச்சைக்காரன் படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே சொல்லி இருந்தார்கள். ஆனாலும் இப்பொழுது அவரது முடிவு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ள்ளது. அதாவது, அவர் அருந்ததி நாயாருடன் இணைந்து செய்தான் எனும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்தில் நடிக்கவுள்ள ஏனைய நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
எனவே, மிக விரைவில் செய்தான் திரைப்படத்தை இரசிகர்கள் கண்டு களிக்கலாம். இதில் என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-கோடம்பாக்கக் குருவி-