இளையதளபதி விஜய் நடிக்கும் படங்களுக்கு எப்படி எதிர்பார்ப்புக்கள் உள்ளதோ, அப்படியே அவரது படப் பாடல்களுக்கும் பரவலான எதிர்பார்ப்பு சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரைக்கும் உண்டு. அந்தளவுக்கு, விஜய்யின் திரைப்படப் பாடல்களுக்கு பலர் அடிமை.
இந்நிலையில், இப்பொழுது புலி படத்தை முடித்த கையேடு இயக்குனர் அட்லீ இயக்கம் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார்.
இது நமக்கு தெரிஞ்ச விசயம்தானே மாப்ளன்னு, நீங்க பாக்குறது புரியுதுப்பா. இனிதான் மேட்டர் இருக்கு. அதாவது..... இந்தப் படத்தில் அண்மையில் தேசிய விருதைப் பற்றுக்கொண்ட பாடகி, பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஷ்ணனின் புதல்வி உத்ரா ஒரு பாடலை பாடவுள்ளார்.
இந்தப் பாடலை மிக பிரம்மாண்டமாகவும், இனிமையாகவும் எடுக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
-கோடம்பாக்கக் குருவி-