ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில், வித்தியாசமான வேடங்களைத் தேடித் தேடி நடிக்கும் விக்ரமின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஐ’.
இப்படம் வரும் ஒக்டோபர் 22-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தை தயாரித்த ஆஸ்கார் ரவி சந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் “இப்படம் கண்டிப்பாக தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 22-ம் தேதி திரைக்கு வரும்.
படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடக்கவுள்ளது. இவ்விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் ஸ்வாஸ்நெகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா அதன் பின்னர் சில நாட்கள் கழித்து நடக்கவுள்ளது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அதிரடி நாயகன் ஜாக்கி சான் கலந்துகொள்ளவுள்ளார்” என ஆஸ்கார் ரவி சந்திரன் தெரிவித்தார்.
காதல் என்றால் இவருக்கு கை வந்த கலை. காதலிலேயே வாழ்ந்து , நடித்து காதல் & கழற்றி விடல் துறையில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெறும் அளவுக்கு பல நடிகைகளுடன் அப்போதும் இப்போதும் பேசப் படுபவர் நம்ம சிம்பு.
இறுதியாக இவரின் வாலில் தொங்கிகொண்டிருந்த ஹன்சிகா வாலை விட்டு விழுந்தும் சிம்புவை விட்டு விடுவதாக இல்லையாம். அமோகமாக வளர்ந்த காதல் இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் உடைந்து போனது தெரிந்த விடயமே.
இது இவ்வாறிருக்க இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான படப்பிடிப்பு முடியாத நிலையில் இருந்த வேட்டை மன்னன் திரைப்பட படப்பிடிப்புக்களும் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
வேட்டை மன்னன் என்ற படத்துக்காக சிம்புவுடன் ஹன்சிகா ஜோடி சேர்ந்தது தெரிந்ததே.
இது இவ்வாறு இருக்க அண்மையில் ஹன்சிகா வெளியிட்ட கருத்துக்களில் தன்னுடைய குடும்பம் ஒழுக்கம் நிறைந்த குடும்பம். சிம்பு என்னை புரிந்து கொள்ள வில்லை. ஆனாலும் அவர் (சிம்பு )நல்ல இருக்க வேணும். நானும் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் கட்டாயம் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார் ஹன்சிஹா.
வாலு திரைப்படத்தின் படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் இருவரது காதல் உடைந்தாலும் திரைப்படத்தின் முழுமையான காட்சிகளையும் ஹன்சிகா நடித்து கொடுத்திருந்தமையும் குறிப்பிடத் தக்கது