Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அஜித்தின் வீரம் மூலமாக மீண்டும் தமிழுக்கு தலைகாட்டிய பால்வெள்ளை அழகி தமன்னாவுக்கு வீரம் ஹிட் அடித்துப் பெருவெற்றியைத் தமிழில் மட்டுமல்லாமல், ஏனைய தென் மாநில மொழிகளிலும் தந்தது பெரிய உற்சாகத்தைக் கொடுக்க, ஹிந்தியிலும் அவர் ராசியாகிப் போனார்.

ஹிந்தியில் தமன்னாவைத் தேடி பெரிய வாய்ப்புக்கள் வரும் நேரம், திடீரென அனைவரும் ஆச்சரியப்படுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "நண்பேண்டா" படத்தில் ஒற்றைப்பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்புக்கு ஓகே சொல்லியிருந்தார்.

இயக்குனர் பல நடிகைகளை முயற்சித்தும் எல்லோரும் கழன்றுகொள்ள தமன்னா மட்டும் ஓகே சொன்னது பலருக்கும் ஆச்சரியம்.

விசாரித்தால் விஷயம் வெளியானது.

ஒரேநாள் படப்பிடிக்கு தமன்னா கேட்டிருப்பது 10 லட்சம் ரூபாயாம்.
அம்மாடி.
ஆனால் இதற்கும் தயாரிப்பு தரப்பு ஓகே சொன்ன படியால் தான் பால் வெள்ளை அழகி சிறு பாத்திரத்துக்கு சம்மதம் சொன்னாராம்.
995 Views
வருவார் வருவார் என்று தமிழக அரசியல் ரஜினிக்காக காத்திருந்தது; காத்திருக்கிறது.

"நான் எப்போ வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில கரெக்டா வருவேன்" என்று பஞ்ச் வசனம் பேசி பொடி போட்டு வைத்தார் சூப்பர் ஸ்டார்.

உலகத்தின் அத்தனை VIPகளும் ட்விட்டரில் கலக்கி, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து, ரசிகர்களோடு நேரடியாக உறவுகளைப் பேணி வரும் இந்த நவீன யுகத்தில் ரஜினியும் ட்விட்டரில் குதிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் திடீரென நேற்று ரஜினி ஒரு சிறு காணொளி அறிவித்தலோடு ட்விட்டரில் களம் இறங்கினார்.
https://twitter.com/superstarrajini

இறங்கியது தான் தாமதம், ரஜினியை ட்விட்டரில் தொடர்வோர் எண்ணிக்கை வினாடி தோறும் வெள்ளமாகப் பெருக ஆரம்பித்தது.

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்பது போல, ரஜினியிடமிருந்து வந்த ஒரே ஒரு ட்வீட்டோடு ரசிகர்களினால் ட்விட்டர் அல்லோலகல்லோலப்பட்டது.



இதற்கிடையில் தன்னைத் தொடர்வோர் எல்லோருக்கும் ரஜினியின் ட்விட்டரிலிருந்து , வெளிவர இருக்கும் ​கோச்சடையான படம் பற்றிய விளம்பர ட்வீட் ஒன்று அனுப்பப்பட்டது.




இவ்வாறு 5000க்கும் அதிகமானோருக்கு சென்ற ட்வீட்டுக்கள் பலரையும் என்னடா இது சூப்பர் ஸ்டாரை கோச்சடையான் விளம்பர ட்விட்டர் ஆக்கிட்டாங்களே என்று யோசிக்கும் நேரத்தில் இன்று அவரது ட்விட்டர் தொடர்வோர் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டிய நிலையில் முன்னைய விளம்பர ட்வீட்டுக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

சினிமாவில் தனக்கென தனி வழி, தனி ஸ்டைல் உருவாக்கிய ரஜினி ட்விட்டரிலும் தனிப் பாணியில் கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்திய பிரபலங்களில் மிக விரைவாக 1 லட்சம் தொடர்வோரை (Followers) எட்டியவர் என்று நேற்று சாதனை படைத்த ரஜினி இன்னும் சில நாளிலேயே இப்போதைக்கு அதிக ரசிகரைத் தொடர்வோராகக் கொண்டுள்ள

அமிதாப் பச்சன் - 8.62 மில்லியன்
ஷாருக் கான் - 7.52​ மில்லியன் ​
அமீர் கான் - 6.68​ மில்லியன் ​
சச்சின் டெண்டுல்கர் - 4.24​ மில்லியன் ​
சல்மான் கான் - 6.78​ மில்லியன் ​
பிரியங்கா சோப்ரா - 5.97​ மில்லியன் ​
​நரேந்திர மோடி - 3.9 மில்லியன்
தீபிகா படுகோன் - 5.99 மில்லியன்
தோனி - 2.8 மில்லியன்
ஷ்ரேயா கோஷல் - 2.8 மில்லியன் ​
A.R.ரஹ்மான் - 3.9 மில்லியன்
விராட் கோளி - 3.05 மில்லியன்
ஹ்ரிதிக் ரோஷன் - 5.47 மில்லியன்
அக்ஷய் குமார் - 4.73 மில்லியன்

ஆகியோரை முந்திவிடுவார் என்று எதிர்பார்க்கின்றனர்.

தமிழில் அதிக தொடர்வோரைக் கொண்டுள்ள சிலர்...

சித்தார்த் - 1.06 மில்லியன்
ஷ்ருதி ஹாசன் - 1.03 மில்லியன்
தனுஷ் 749000
த்ரிஷா 808000
மாதவன் - 732000
சிம்பு - 310000
சிவ கார்த்திகேயன் - 322000
ஜெயம் ரவி - 273000
அனிருத் - 263000
ஹரிஸ் ஜெயராஜ் - 254000


​இப்போதைக்கு 2 லட்சம் தாண்டியுள்ள ரஜினியின் ட்விட்டர் வளர்ச்சி ட்விட்டரிலும் அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கப் போகிறதோ?

உங்கள் சூரியன் வானொலியையும் நீங்கள் ட்விட்டரில் தொடர - ​

https://twitter.com/SooriyanFMlk

1,288 Views
நம்ம தல அஜித்தினுடைய படங்களில் நடிப்பதற்கு பொலிவூட் ஹீரோக்களிடம் இப்போது போட்டி நிலவுகிறது. அதிகமான தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகும் இந்நிலையில், அஜித் நடிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கிய ஆரம்பம் திரைப்படத்தில் நடிக்க , நான் நீ என பொலிவூட் ஹீரோக்களிடம் போட்டி எழுந்துள்ளது.

ஷாருக்கான் மற்றும் இன்னொரு புகழ் பெற்ற ஹிந்தி ஹீரோவான அக்ஷய்குமாரிடையே இப்பொழுது போட்டி நிலவுகின்ற நிலையில், இன்னொரு ஹீரோவும் இந்த கலவர போட்டியில் குதித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல, சல்மான் கான் !



ஏற்கனவே, ஆரம்பத்தின் உரிமையை வாங்கி வைத்துள்ள அக்ஷய்குமாரிடம் அதற்கான பட உரிமையை அதிக தொகை கொடுத்தாவது வாங்கி விடுமாறு சல்மான் தன் மனேஜரிடம் கட்டளையிட்டுள்ளராம். ஆனாலும், கீழே வராத அக்ஷய், சில சமயம் அவர் எதிர்பார்க்கும் தொகை கிடைத்தால் தன நிலையிலிருந்து இறங்கிவர வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.

என்ன இருந்தாலும், நம்ம ஹீரோவின் ஒரு படத்துக்கு இப்படி பிரபல பொலிவூட் ஹீரோக்கள் மோதிக் கொள்வது பெருமையான விடயம் தான்.

இந்த போட்டியில் இறுதியில் யாருக்கு படம் செல்கிறதோ? பார்க்கலாம்.
அதுசரி ஆரம்பத்தில் இன்னொரு ஹீரோ இருக்கிறாரே அந்த வேடத்தில் யார்?

1,335 Views
தமிழில் கேடி மற்றும் நண்பன் படங்களில் நாயகியாக நடித்த நடிகை இலியானா தெலுங்கிலும் ஹிந்தியிலும் மிகப் பிரபலமானவர். இவர் நேற்று மும்பாய் போக்குவரத்துத்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி வாகனத் தகட்டை பொருத்திய காரில் பயணித்தமையே இவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணமென தெரியவந்துள்ளது.
இலியானாவும் அவரது மூன்று நண்பர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

வருண் தவான் ஹீரோவாக நடித்துவரும் மெயின் தேரா ஹீரோ எனும் இந்திப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

என்னம்மா இலியானா? இப்பிடி போலிகளை பயன்படுத்தலாமா?
13,674 Views
கடந்த சில மாதங்களாக தன்னுடைய இயக்கத்தில் ஒரு படத்தை எடுத்துவரும் பார்த்தீபன், அதில் வழமை போல தானே நடிக்காமல் முற்று முழுதாக புதுமுகங்களை வைத்து இயக்கி வருகிறார். இது ஏற்கனவே உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான்.

படத்துக்கு கதை திரைக்கதை வசனம், இயக்கம் எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
ரைட்டு, இப்போ நாங்கள் முக்கியமான விசயத்துக்கு வரலாம்.

இந்தப் படத்தில் பல எதிர்பார்ப்புக்களை பார்த்தீபன் ஏற்படுத்த முயன்று வருகிறார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.

சிம்ரன் பாடுகிறார்... டாப்சி நடிக்கிறார் என்றெல்லாம் தன் ட்விட்டரில் ஒவ்வொரு நாளும் அப்டேட்டிக் கொண்டிருக்கிறார்.

பல பிரபல நடிகர்களை ஒரு காட்சியில் கொண்டுவந்துள்ள பார்த்தீபன், இன்னொரு படி மேலே போய், நம்ம பிரபுதேவாவையும் படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாட வைக்க முயற்சித்துள்ளார்.

ஆரம்பத்தில் நடனப்புயலும் ஓகே சொல்லிருந்தாலும், பின்னர் ஹிந்திப் படங்களில் அவர் பிசியாகி விட்டார். பொறுத்துப் பார்த்த பார்த்தீபன்... இது வேலைக்கு ஆகாது என்று புரிந்து கொண்டு , பிரபுதேவா இல்லைன்னா என்ன ? அவர விட புதுசா ஒருத்தர போட்டிடலாம் என யோசித்து கொண்டு வந்திருக்கிறார் பாடலுக்கு நடனமாட.

அது அண்மைக்காலமாக எல்லாப் பக்கமாகவும் ஹிட் ஆகிவரும் நம்ம சிவகார்த்திகேயனை.

இப்பொழுது பார்த்தீபனின் படத்தில் பாடலுக்கு நடனமாட சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்!

இருந்தாலும், பார்த்தீபன் அவர்களே! நீங்க ஒரு தடவை சிவாவிடம் அவருக்குரிய சம்பளத்தைப் பற்றி கேட்டுடுங்க.. இல்லைன்னா சம்பளத் தொகை கேட்டு நீங்க சாய்ஞ்சு போகக் கூடும்.
1,058 Views
இங்கிலாந்தின் வட மேற்குப் பிராந்தியத்தில் லீக் மட்டத்தில் மூன்றாம் பிரிவில் விளையாடும் கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான விர்ரால் (Wirral) கிரிக்கெட் சரித்திரத்திலே மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கைகளில் ஆட்டமிழந்த 'சாதனை'யைப் படைத்துள்ளது.

ஹஸ்லிங்க்டன் (Haslington) அணிக்கெதிரான போட்டியில் 3 ஓட்டங்களை மட்டுமே பெற்று சுருண்டது விர்ரால் அணி.

அதிலும் ஆட்டமிழந்த வீரர்கள் 10 பேருமே ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.
11ம் இலக்க வீரர் ஒரு ஓட்டமும், உதிரிகள் இரண்டு ஓட்டங்களும் இல்லாவிட்டால் பூஜ்ஜியமே தான்.



இந்த சாதனையை உடைக்க இனி யாராவது காசு வாங்கிக்கொண்டு விளையாடினால் தான் உண்டு.

எதிரணி ஹஸ்லிங்க்டன் 108 ஓட்டங்களை முன்னதாகப் பெற்றிருந்தது.



ஆனால் இதை விட ஆச்சரியம் என்னவென்றால் பூஜ்ஜியத்துக்கு சுருண்ட ஒரு அணியும் வரலாற்றில் இருக்கிறது என்பது தான்.

1913ஆம் ஆண்டு சமர்செட் பிராந்தியத்தின் கழகம் லங்க்போர்ட் (Langport) ஓட்டம் ஏதும் பெறாமல் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

அமைதியான இங்கிலாந்தின் வடமேற்கு குடாநாட்டுப் பிரதேசம் விர்ரால் நேற்று இந்த 3 ஓட்டங்களோடு திடீர் பிரபலமாகிப்போனது.

விர்ராலின் 3 ஐ விட உங்கள் ஊர்களில் எந்த அணியாவது குறைவாகப் பெற்றிருந்தால் எங்களுக்குச் சொல்லுங்கள்.
1,451 Views
2014ஆம் ஆண்டில் எந்த அணி உலகக் கிண்ணத்தை ஏந்தும் என்று உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் போலி உலகக் கிண்ணங்கள் ஆயிரக் கணக்கில் அகப்பட்டிருக்கின்றன.

நம்ம நாட்டில் இல்லை.
நமக்கு ரொம்ப நெருங்கிய உறவு நாடாக மாறிக்கொண்டிருக்கும் சீனாவில்.

உலகின் எந்த ஒரிஜினலுக்கும் சொல்லி வைத்த மாதிரி அச்சொட்டாக அப்படியே டுப்ளிகேட் தயார் செய்வதில் விண்ணர்களான சீனர் உலகக் கிண்ணத்தையும் சீசன் பார்த்து தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.

சீனாவின் Zhejiang மாநிலத்தின் Yiwu என்ற நகரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் களஞ்சியத்தில் தயாரித்து கால்பந்து மோகம் முற்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இவ்வாறான 1020 போலி உலகக்கிண்ணங்கள் சீன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றில் ஒரு தொகுதி லிபியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்தனவாம்.
ஆனால் லிபியா இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெறவில்லை.

கிரிக்கெட் உலகக் கிண்ணங்களுக்கு குறைவில்லாத நம்ம நாடு எத்தனை போலி கால்பந்து உலகக் கிண்ணங்களுக்கு ஓர்டர் கொடுத்திருந்ததோ?

இதிலே ஆச்சரியப்படும் விதமாக போலி உலகக் கிண்ணங்களில் உண்மையான உலகக் கிண்ணத்தில் இருக்கும் அத்தனை தரவுகளும் அச்சொட்டாக அப்படியே இருந்தனவாம். ஒரு கீறல் உட்பட..



போலி செய்தாலும் போக்கிரித்தனம் செய்தாலும் ஒரு நேர்த்தியாகத் தான் செய்கிறார்கள்.
1,332 Views
கத்தி எப்போது வருது என்ற பரபரப்பை விட மோடி சந்தித்ததாலேயே இப்போ விஜய் பற்றித் தான் எங்கும் தீயாகப் பரபரப்பு.
எதிர்கால இந்தியப் பிரதமரே (!?) அழைத்து ஆசையாக சந்திக்கும் விஜயையே காக்க வைத்துக்கொண்டு இழுத்தடிக்கிறார் ஒரு சின்னப் பையன்.

இளைய தளபதி விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட். அப்படத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு ஹாரிஸ்ஜெயராஜின் இசை முக்கிய காரணமாக இருந்தது.

ஆனாலும், விஜய்யை வைத்து தற்போது இயக்கி வரும் கத்தி படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜை ஒப்பந்தம் செய்யவில்லை ஏ.ஆர்.முருகதாஸ். காரணம், துப்பாக்கி படத்தின்போது ஹாரிஸ் ஜெயராஜ் அநியாயத்துக்கு தாமதம் செய்தாராம். சொன்ன நேரத்துக்கு பாடல்களைக் கொடுக்காமல் பொறுமையை சோதித்திருக்கிறார். அதனாலேயே துப்பாக்கி பட பணிகள் கடுமையாய் பாதிக்கப்பட்டனவாம்.

ஹாரிஸ் ஜெயராஜினால் பட்ட அந்த அனுபவத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இன்னும் மறக்கவில்லை. அதனால்தான் கத்தி படத்துக்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தாராம்.
பெரிய இயக்குநர் தன்னை கமிட் பண்ணிய உற்சாகத்தில் ஆரம்பத்தில் சுறுசுறுப்பு காட்டிய அனிருத் அதன்பிறகு வழமைபோல் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டாராம். சொன்னபடி ட்யூனைக் கொடுக்காமல் இழுத்தடிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

ஏறக்குறயை முக்கால்வாசி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில், அனிருத்திடமிருந்து இன்னும் ஒரு பாடல் வர வேண்டியதிருக்கிறதாம். உடனடியாய் அந்த பாடல் வேண்டும் என்று விரட்ட ஆரம்பித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

வழக்கம்போல் பார்ட்டி, நண்பர்கள் (பெண் நண்பிகளும் தான்) சந்திப்பு இவற்றுக்கிடையில் இடையிடையே கொஞ்சமாக வேலை செய்கிறாராம் அனிருத்.

பார்த்துப் பார்த்து விஜய்யிடமே முறையிட்டுள்ளாராம் முருகதாஸ்.
விஜய் தூக்குவாரா கத்தி?
9,778 Views
முன்பு ஹிட் ஆன பழைய திரைப்படங்களை இன்றைய புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு அதாவது, டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வெளியிடுவது சமீபகால டிரென்ட்!

சிவாஜி கணேசன் நடித்த ’கர்ணன்’, ‘வசந்தமாளிகை’, எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ஏன் கமல் - ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற பல படங்கள் இப்படி சமீபத்தில் வெளியாகின!

இந்த வரிசையில் அடுத்த தலைமுறை ஹீரோக்களில் அஜித் முந்திக்கொள்கிறார்.
ஆம்! அஜித் - ஷாலினி ஜோடியாக நடித்து, சரண் இயக்கிய ‘அமர்க்களம்’ படமும் டிஜிட்டல் மயமாகிறது!

அஜித்தின் 25-ஆவது படமாக அமைந்த இப்படம் 1999-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்த விஷயம்!



அத்துடன் அஜித் - ஷாலினியின் காதல், திருமணம் போன்ற முக்கிய வாழ்க்கைத் திருப்பங்களும் இந்தப் படம் மூலமாகவே நிகழ்ந்தவை என்பதும் சிறப்பானது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ’அமர்க்களம்’ படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே-1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்!
அதாவது, ரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்த நாள் பரிசாக ‘அமர்க்களம்’ படம் மீண்டும் வெளியாகவிருக்கிறது.
2,516 Views
உயரத்தில் இருக்கிற உங்கள் சூரியனின் உயரத்தைத் தொட எல்லாருக்குமே அதீத ஆசை..

ஆனால் ஆசை இருக்கிற எல்லோருக்கும் அடைய முடிவதில்லையே.

அடைந்தவரும் நிரந்தரமாக அனுபவிப்பதில்லை. ஆனாலும் உயரங்களைக் கீழே இருந்து பார்க்கும் பலருக்கு அடைவது மட்டுமன்றி, அந்த உயரத்தையே தங்கள் சாதனை சாகசத்துக்கு மாற்றுவதில் ஒரு சந்தோசம்..

இதுவும் ஒரு சாதனை சாகசம் தான். 2013.04.03 அன்று முப்பத்து ஏழு மாடிகளைக் கொண்ட இலங்கையின் முதலாவது உயர்ந்த கட்டிடமான உலக வர்த்தக மையத்தில் தான் இந்த அரிய சாகசம் நடந்தேறி இருக்கிறது!!!

கொழும்பு வாழ் மக்களுக்கு புதியதோர் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை வழங்கி இருக்கிறார்கள் அமெரிக்க பிரஜை. கிறிஸ்டன் ஈவன் மற்றும் கனடா பிரஜையான கரட் பெரீ.
பேஸ் ஜம்ப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிகளைக் கண்ட இவர்கள் இருவரும் முதன் முதலாக இலங்கை மண்ணில் பேஸ் ஜம்ப் போட்டிகளுக்கான ஒரு முன்னோட்டத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள்.



அதற்காக இருவரும் உலக வர்த்தக மையத்தின் 37 ஆவது மாடிக்கே சென்று அங்கிருந்து தரையை நோக்கி குபீர் என்று விழுந்திருக்கிறார்கள்.

சூரியன் எப் . எம் இன் 35 ஆவது மாடியை கடக்கின்ற பொழுது அவர்களுடைய பரசூட் விரிந்து கொண்டது.
நல்லவர்கள் குடிகொண்ட இடமல்லவா? அதுதான்.!!!!



நல்லவேளை உலக வர்த்தக மையத்தினை 37 மாடிகளோடு நிறுத்தி விட்டார்கள்.....
கீழே இருந்து விபரம் அறியாமல் வேடிக்கை பார்த்தவர்கள் ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் வாய் பிளந்து நின்றார்கள்.

அடுத்தமுறை சொல்லிட்டு செய்யுங்கப்பா.
பார்க்காத பலரும் பார்ப்பாங்கல்ல..
1,233 Views
இயக்குனர் விஜய் + அமலா பால் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அதுவும் திகதியும் நிச்சயிக்கப்பட்டுள்ளது, எதிர்வரும் ​ஜூன்​ 12. தெய்வத்திருமகள் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜ​ய்க்கு ​ தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இயக்குனர் எனும் இடம் இருக்கிறது. அந்தத் திரைப்படத்திலேயே அனுஷ்காவோடு இன்னொரு நாயகியாக அமலாபாலையும் நடிக்க வைத்து இருவருக்குமான நட்பை நெருக்கப்படுத்தியுள்ளார் விஜய் என்று கூறப்படுகிறது.

இதுவரை அமலாவும் விஜயும் தமது காதலை வெளிப்படையாக மறுத்து வந்திருந்தாலும், விஜய் ​(இயக்குனருங்கோ) ​தன்னுடைய அடுத்த படமான தலைவா படத்திலும் அமலாவை நடிக்க வைத்தபோது கோடம்பாக்கத்துக் காரர்கள் உறுதி செய்தார்கள் இவ​ர்​களது காதலை !

இவற்றோடு., கடந்த சில நாட்களுக்கு முன்னர் ​நடந்த​ சைவம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அமலா பாலை ரொம்ப புகழ்ந்து மிகைப்படுத்து கிலாகித்திருக்கிறார் விஜய்.

இப்போ மொத்தத்தில் பார்க்கின்றபோது, எதிர்வரும் ஜீன் 12 ஈ இந்த காதல் ஜோடி கல்யாண பந்தத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியே வந்து விட்டது! பார்க்கலாம் திரையில் தோன்றிய இந்தக் காதலும் எப்படி அரங்கேறப்போகிறது என்று...!!​
1,737 Views
சுப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானுக்கு கிளம்பியிருக்கும் பெரும் எதிர்பார்ப்பு அலைகளுக்கு மத்தியில், ரஜினியின் அடுத்த படம் தொடர்பான தகவல்களும் கசிந்துள்ளன.
இதில் இயக்குனர் வேறு யாருமல்ல!
ரஜினியின் நெருக்கமான நண்பர் கே.எஸ்.ரவிக்குமார் தான் என்று கூடப்படும் நிலையில், அடுத்த படத்தில் சுப்பர் ஸ்டாருக்கு இரண்டு ஹீரோயின்கள் என்றும் அவர்கள் யாரென்றும் கோடம்பாக்கத்தார் காதுகளில் ஓதப்பட்ட ரகசியக் கதையை நாமும் ஓடிப் பிடித்துக் கொண்டோம்.

ஒருவர் ஆறடி அழகி நம்ம அனுஷ்காவும் , அடுத்தவர் ஹிந்தியில் கலக்கும் சோனாக்ஷி சின்ஹா என்றும் தெரிய வந்துள்ளது.



கோச்சடையானுக்காக ரஜினி தனிப்பட விருப்பப்பட்ட தீபிகா மாதிரி இவர்களும் ரஜினியின் ஸ்பெஷல் தெரிவுகள் தான் என்றும் கேள்வி.

ஆனாலும், இந்த விபரங்கள் பற்றி ரஜினி தரப்பிலிருந்து எந்தத் தகவல்களும் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை.
1,247 Views
இலங்கையைச் சேர்ந்த தமிழ் ரப், ஹிப் ஹொப் கலைஞரான ஆர்யன் தினேஷ் கனகரட்னம், பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

தன்னுடைய பாடல் வரிகளைத் தன் அனுமதியில்லாமல் புதிய பாடல் ஒன்றில் G.V.P பயன்படுத்தியதாகவே தினேஷின் குற்றச்சாட்டு உள்ளது.

நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் லவ்லி லேடீஸ் (Lovely Ladies) பாடலில் வரும் ரப் வரிகள், தன்னுடைய புதிய பாடலில் இருந்து பெறப்பட்டவை என்பதே தினேஷின் குற்றச்சாட்டு.

முன்னர் விஜய் அன்டனி போன்றோரின் படங்களில் பாடி, ரப் பாடல்கள் எழுதியுள்ள தினேஷ், இசைப்புயலின் கடல் திரைப்படத்தில் தினேஷ் பாடிய மகுடி மூலம் உலகம் முழுதும் பிரபலமாக்கியிருந்தது.

இந்தப் படத்தில் G.V.பிரகாஷ் குமாரினால் பாட அழைக்கப்பட்டதாகவும், எனினும் பாடல் வரிகளை மட்டும் எடுத்துவிட்டு தன் அனுமதியில்லாமல் அதைப் பயன்படுத்தியதாகவும் பொங்கியுள்ளார் ADK.

இப்போது குறித்த அந்தப் பாடலில் பாடல் வரிகள் என்று நா.முத்துக்குமாரின் பெயரும், பாடியவர்களில் ஒருவராக தினேஷின் பெயரும் இருக்கின்றன.
ஆனால் வரிகள் சிலது தனதே தவிர, பாடிய குரல்களில் எதுவும் தன்னுடையது அல்ல என்கிறார் தினேஷ்.

இதுபற்றி GVP இடம் கேட்டால் நேரடியாகப் பதில் கூற மறுக்கிறார் என்கிறார் தினேஷ்.

அடக்கமும், அமைதியும் , சிறிதும் பெருமையில்லாத பெருந்தன்மை உடைய இசைப்புயல் A.R.ரஹ்மான் குடும்பத்தில் இப்படி ஒருவரா என்று பொருமுகிறார் கோபத்தில் தினேஷ் கனகரட்னம்.

மௌனம் கலைப்பாரா GVP?
1,199 Views
IPL 2014 நிறுத்தப்பட மாட்டாது...IPL 2014 நிறுத்தப்பட மாட்டாது...
ஸ்ரீனிவாசன் பதவி அகற்றப்பட்டார்..
இந்திய உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

மேலும், சுனில் கவாஸ்கர் இந்தியக் கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவராகவும், (IPL காலத்தில் இவரது கடமைகள் இருக்கும்)
இந்தியக் கிரிக்கெட் சபையின் 5 உப தலைவர்களில் ஒருவரான ஷிவ்லால் யாதவ் தலைவருக்கான கடமைகளைப் பார்த்துக்கொள்வார் எனவும் அறிவித்துள்ளது.

எனினும் சென்னை, ராஜஸ்தான் அணிகள் இம்முறை IPL இல் விளையாடுவதைத் தடைசெய்யப் போவதில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தலைவராகப் பதவியேற்க எண்ணியிருந்த ஸ்ரீனிவாசனின் எண்ணம் தடைப்பட்டுள்ளது.

ஸ்ரீசாந்தின் கைதோடு ஆரம்பித்த பந்தய, சூதாட்ட விவகாரம், ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனின் கைது, இதர சர்ச்சைகள் என்று நீடித்துக்கொண்டே செல்கிறது.

எனினும், இவ்வருடத்தின் IPL ஏற்கெனவே அறிவித்தது போல ஏப்ரல் 16ஆம் திகதி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் ஆரம்பமாகும்.

1,314 Views



இந்திய கிரிக்கெட்டில் தொடரும் சிக்கல் நிலை, மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் இந்திய உயர் நீதிமன்றம்.

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைவராக முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் நியமிக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.

இது பற்றி நேற்றைய தினம் முதலில் வெளியான செய்தியை இங்கே வாசியுங்கள்.

இந்திய கிரிக்கெட் சபையின் தலைமை பொறுப்பு கிடைத்தால் சந்தோசப்படுவேன். அத்தோடு எந்த சவாலாயினும் அதனை எதிர் கொண்டு உயர் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக சுயாதீன விசாரணைகள் இடம்பெற சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்ற கருத்தை கவாஸ்கர் வெளியிட்டுள்ளார்.

இப்படி இவர் கருத்துக்களை வெளியிட்டாலும் பல கோணங்களில் பலரால் இந்த உயரிய பதவி குறிவைக்கப்படுகின்றது.

வங்காள விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் மடான் மித்த்ராவின் கருத்துக்களை பொறுத்தவரை அந்த பதவியில் ஆளுமை பொருந்திய முன்னாள் அணித்தலைவர் கங்குலி நியமிக்கபடுவதே சிறந்தது என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் என்னையும் மறந்து விடாதீர்கள் என்ற போர்வையில் எக்குத் தப்பான கருத்துக்களை அடிக்கடி அள்ளி வீசிவரும் சர்சைக்குரிய பிஷன் சிங் பேடியின் கருத்துப்படி அந்த பதவியில் முன்னாள் BCCI தலைவர் சசாங் மனோகர் நியமிக்கபடவேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் வீரர்கள் கும்ப்ளே,ஸ்ரீகாந்த்,டிராவிட் ஆகிய வீரர்கள் இந்திய கிரிக்கெட் சபையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.



இப்படியான சிக்கல்களுக்கு மத்தியில் IPL ஆரம்ப விழா ,அறிமுக விழா தொடர்பான செய்தியாளர் சந்திப்பு டுபாயில் ஒழுங்கு செய்யபட்டிருந்து பிற்போடப்பட்டு கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் பிந்தி கிடைத்த BCCI யின் தகவல்படி இப்படியாக கவாஸ்கரின் வரவை இந்திய கிரிக்கெட் சபையில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்றும் பேசப்படுகின்றது.இவருக்கு பதிலாக முன்னாள் ஹைதராபாத் சுழல்பந்துவீசாளர் சிவ்லால் யாதவ் அல்லது அனில் கும்ப்ளே ஆகியோரின் வரவையே BCCI யின் உயர் மட்டத்தினர் விரும்புவதாகவும் அறியக்கிடைக்கிறது.

இந்த சிவ்லால் யாதவ் BCCI யின் பிரதி தலைவராக இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை BCCI யின் யாப்பு பிரகாரம் சபையின் தலைவர் மரணித்தாலோ அல்லது அவரால் செயற்பட முடியாது போனால் அடுத்த 15 நாட்களுக்குள் அடுத்த தலைவர் தேர்வாகும் வரை அந்த தலைமை பொறுப்பை செயலாளரே கவனிக்க வேண்டும் என்ற விதி முறை இருக்கின்றமையும் சுனில் கவாஸ்கர் பதில் தலைவராவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது எனலாம்.



இந்த நிலையில் அடுத்து வரப்போகும் நாட்களில் இந்திய கிரிக்கெட் சபையில் திடுக்கிடும் மாற்றங்களும் ,மாறுதல்களும் வரலாம் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
1,301 Views
[1]      «      1746   |   1747   |   1748      »      [1750]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top