1980களில் தமிழ் ஹிந்தி என, இரண்டு மொழிகளிலும் கோடி கட்டிப் பரந்த பிரபலம் நடிகை ஸ்ரீதேவி. இவருக்கு இல்லாத இரசிகர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு எல்லா தரப்பினரையும் கவர்ந்தவராக வலம் வந்தார் அம்மணி.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய்யின் புலி படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தையும் பல யோசனைகளுக்குப் பிறகே ஏற்றுக் கொண்டார்.
சரி, விடயம் என்னவென்றால், ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள். ஜான்வி, குஷி. இவர்களில் ஜான்விக்கு மொடலிங்கில் ஆர்வம் அதிகம். இதனால், சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வமாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதிலும், இவர் அறிமுகமாகும் படத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆரம்பமே அமர்க்களம் போல? அப்பாவைப் போல ஆர்யனும் இளம் பெண்களைக் கவரும் வித்தை தெரிந்தவர்தான். எனவே, நல்ல ஆரம்பமாக ஜான்விக்கு அமைந்தால் சரி !!
-கோடம்பாக்கக் குருவி-