இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி அட்டவணை வெளியானது..!இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் பங்குபற்றும் முக்கிய கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இடம்பெறவுள்ளது.
இதற்கான போட்டி அட்டவணையில் சில மாற்றங்களை மேற்கொண்டு இன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை வெளியிட்டிருக்கிறது.
ஜூன் மாதத்தில் 3 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்திலும் அதன் பின்னர் ஜூன் 17-21 வரை இடம்பெறும் முதல் டெஸ்ட் போட்டி காலியில் ஆரம்பமாகிறது.
2 வது டெஸ்ட் போட்டி ஜூன் 25-29 வரை கொழும்பு சரவணமுத்து மைதானத்திலும், 3 வதும் இறுதியுமான டெஸ்ட் ஆட்டம் பல்லேகல மைதானத்தில் ஜூலை 3-7 ம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளது.
மழையினுடைய குறுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில் 5 ஒருநாள் போட்டிகளுக்கும் மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை சிறப்பமசமே.
ஜூலை மாதம் 11 ம் திகதி முதல் ஜூலை 26 ம் திகதி வரை 5 ஒருநாள் போட்டிகளும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் போட்டி தம்புள்ளையிலும், 2 வது போட்டி பல்லேகலையிலும், 3 ம் ,4 ம் ஒருநாள் போட்டிகள் கொழும்பு ஆர் .பிரேமதாசா மைதானத்தில் இருவு-பகல் ஆட்டமாகவும், 5 வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி ஜூலை 26 ம் திகதி ஹம்பாந்தோட்டையிலும் இடம்பெறவுள்ளது.
ஜூலை 30,ஆகஸ்ட் 1 ஆகிய தினங்களில் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகள் ஆர் .பிரேமதாசா மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு அணிகளுக்கிடையிலும் இறுதி 6 வருடங்களில் நடக்கின்ற முழுமையான 6 வது தொடர் இதுவென்பதோடு கடந்த 18 மாதங்களில் நடக்கும் 3 வது தொடர் இதுவென்பதும் முக்கியமானது.